சென்னை:-அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் தினேஷ். இதன் பிறகு இவர் நடித்த குக்கூ, திருடன் போலிஸ் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அடுத்து இவர் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் தலைப்பு ‘போடா ஆண்டவனே என் பக்கம்’. ரஜினி படையப்பா படத்தின் பேசிய வசனத்தை சற்று திருத்தி டைட்டிலாக வைத்துள்ளனர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, மேலும் டெக்னிக்கல் டீம் குறித்து விரைவில் அறிவிக்கப்படுமாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி