சென்னை:-ரஜினிகாந்த்-லதா தம்பதிக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்று 2 மகள்கள். இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010ம் வருடம் செப்டம்பர் 3ம் தேதி, சென்னையில் திருமணம் நடந்தது. இது, இரண்டு பேர் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்.
சவுந்தர்யா அஸ்வின், தனது தந்தை ரஜினிகாந்தை வைத்து, ‘கோச்சடையான்’ என்ற படத்தை டைரக்டு செய்தார். சவுந்தர்யா இப்போது, ஈராஸ் என்ற பட நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை அதிகாரியாக இருந்து வருகிறார். அவர் இப்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். அவருடைய வளைகாப்பு நிகழ்ச்சி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் நடந்தது. சவுந்தர்யா-அஸ்வின் இரண்டு பேர் குடும்பங்களை சேர்ந்த நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி