மும்பை:-இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மும்பை கோட்டை பகுதியில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கிக்கு வருமான வரித்துறையை சேர்ந்த விசாரணை மற்றும் மதிப்பீட்டு குழு அதிகாரிகள் சென்றனர்.
இந்த வங்கியின் சுவிட்சர்லாந்து கிளையில் இந்தியர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்து இருப்பது பற்றி அவர்கள் ஆய்வு செய்து சோதனை மேற்கொண்டனர். இந்த பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. அப்போது இந்தியர்கள் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பது தொடர்பான சில ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி