கிடைத்துள்ள ஆதாரங்களை மிகவும் கவனமாக ஆராய்ந்ததில், கடைசி ரேடியோ தொடர்புக்கு பின் விமானம் மூன்று முறை திரும்பியது தெரியவந்துள்ளது. முதல் முறை இடது பக்கமாக திரும்பிய விமானம், பின்னர் மீண்டும் மீண்டும் 2 முறை இடது பக்கமாகவே திரும்பி மேற்கு நோக்கி பயணித்து, பின்னர் தெற்கு புறமாக அண்டார்டிகாவை நோக்கி சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வானூர்தி பேரழிவு குறித்து ஆராயும் உலகின் முன்னணி ஆய்வாளரான மால்கம் பிரன்னர் இது குறித்து கூறுகையில், விமானத்தின் பாதை மூன்று முறை மாற்றப்பட்டுள்ளதன் மூலம் காக்பிட்டில் இருந்த யாரோ ஒருவர், திட்டமிட்டு விமானத்தின் போக்கை மாற்றியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார். தனது 40 வருட அனுபவத்தில் இது போன்ற நிகழ்வை பார்த்ததில்லை என்று பிரன்னர் மேலும் கூறினார். பிரன்னர் உள்பட பல ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த ஆவணப்படம் அடுத்த மாதம் நேஷனல் ஜியாக்ரபிக் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது. அப்போது விமானம் குறித்த மர்மம் நீங்கும் என தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி