செய்திகள்,திரையுலகம் போட்டி, பொறாமை இல்லை – மீண்டும் நிரூபித்த நடிகர் சூர்யா!…

போட்டி, பொறாமை இல்லை – மீண்டும் நிரூபித்த நடிகர் சூர்யா!…

போட்டி, பொறாமை இல்லை – மீண்டும் நிரூபித்த நடிகர் சூர்யா!… post thumbnail image
சென்னை:-தமிழ் திரையுலகத்தில் என்ன தான் நண்பர்கள் என்று நடிகர்கள் சொல்லி கொண்டாலும், ஏதோ ஒரு ஈகோ இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் நடிகர் சூர்யா தனக்கு எந்த போட்டியும் இல்லை, பொறாமையும் இல்லை என நிரூபித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் வெளிவந்த சூர்யாவிற்கு போட்டி நடிகர் என்று சொல்லப்படும் விக்ரமின் ஐ படத்தை தியேட்டரில் போய் பார்த்து ரசித்தார். அதேபோல் கௌதம் மேனன் மற்றும் சூர்யாவும் சில பிரச்சனைகளால் இருவரும் இணைவதாக இருந்த படம் சில வருடங்களுக்கு முன் கைவிடப்பட்டது. இதை தொடர்ந்து தான் கௌதம் என்னை அறிந்தால் படத்தை இயக்கினார். ஆனால், சூர்யா துளி கூட ஈகோ இல்லாமல் கடந்த வாரம் இப்படத்தை குடும்பத்துடன் சென்று பார்த்து ரசித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி