மேலும், ஸ்ரீதேவி கபூர், கன்னட நடிகர் சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் தற்போது பிரபுவும் இணைந்துள்ளார். இவர் இப்படத்தில் விஜய்க்கு அறிவுரையாளராக வருகிறாராம். இவர் இப்படத்தில் நடிப்பது படத்திற்கு மேலும் ஒரு பலமாக கருத்தப்படுகிறது.
சமீபத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து இதன் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தினர். அடுத்த கட்டமாக வாகமன் இடத்திற்கு செல்லவுள்ளனர். இது கேரளாவில் உள்ள பசுமையான மலை பிரதேசம் ஆகும். அங்கு படத்தின் முக்கியமான காட்சிகளை தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி