ஜோத்பூர்:-கடந்த 1998 ஆம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹெய்ன் என்ற திரைப்பட படப்பிடிப்பிற்காக நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் வந்திருந்தார். அவருடன் மேலும் சில பாலிவுட் நட்சத்திரங்களும் உடன் வந்தனர். அவ்வாறு தங்கியிருந்தபோது ஜோத்பூர் அருகே உள்ள கன்கனி என்ற கிராமத்திற்கு சென்ற சல்மான்கான், வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்கினமான மான்கள் இரண்டை சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். 16 வருடங்களாக நடைபெற்ற இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதையொட்டு நீதிமன்றத்தில் சல்மான்கான் இன்று ஆஜராகிறார். இதில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டால் அதிகபட்சமாக 5 வருட சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி