1. உலகக்கோப்பையில் ஒரு வீரர் எடுத்த அதிகப்பட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் தென்ஆப்பிரிக்க வீரர் கிரிஸ்டன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக 188 ரன்கள் எடுத்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்தது.
2. ஒட்டுமொத்த ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, சேவாக்குக்கு அடுத்தபடியாக உள்ளார்.
3. ஒருநாள் போட்டிகளில் 5 வருடங்களில் 5 இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. முதன் முறையாக சச்சின் தெண்டுல்கர் கடந்த 2010-ம் ஆண்டு இரட்டை சதம் அடித்தார். அவர் 147 பந்தில் இந்த ரன்னை எடுத்தார். கெய்ல் தற்போது 147 பந்தில் 215 ரன்கள் எடுத்துள்ளார்.
4. குறைந்த பந்தில் இரட்டை சதம் அடித்து சாதனையும் கெய்ல் படைத்துள்ளார். இவர் 138 பந்தில் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு முன் சேவாக் 140 பந்திலும், சச்சின் 147 பந்திலும், சர்மா 151 மற்றும் 156 பந்திலும் இரட்டை சதம் அடித்தனர்.
5. 16 சிக்சர்கள் அடித்து டி வில்லியர்ஸ், ரோகித் சர்மாவுடன் சாதனையை பகிர்ந்துள்ளார்.
6. ஒருநாள் போட்டியில் 9136 ரன்கள் குவித்துள்ளார். பிரையன் லாராவைத் தவிர வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் 9 ஆயிரம் ரன்னை கடந்த வீரர் கெய்ல் மட்டுமே.
7. அதிக சதங்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பட்டியலில் 22 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். மேலும், கங்குலி, கோலி ஆகியோருடன் சர்வதேச அளவில் 4-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.
8. கடந்த 2013-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சதம் அடித்தபின் 20 இன்னிங்ஸ் கழித்து தற்போது சதம் அடித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி