அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கிறிஸ்தவ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அன்னை தெரசா குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசிய கருத்துக்கு போப் ஆண்டவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வாடிகன் செய்தி தொடர்பாளர் டி.வி.சேனல் ஒன்றில் கூறியதாவது:–
புனிதமான கிறிஸ்தவ சமய குருவின் சேவையை அரசியலாக்க கூடாது. ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை தெரசா சமுதாயத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் நம்பிக்கை வழிகாட்டியாகவும், கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தார். அவரது வாழ்க்கை உலக மக்களுக்கு ஒரு தூண்டுகோலாக இருந்தது என்று தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி