புதுடெல்லி:-டெல்லி மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அம்மாநில பட்ஜெட் தயாரிப்பில் பொதுமக்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார். புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்த கெஜ்ரிவால், மேலும் கூறுகையில்:-
மக்களே பட்ஜெட்டை உருவாக்குவார்கள். இச்சோதனை முயற்சியில் முதற்கட்டமாக 5 முதல் 10 தொகுதியில் உள்ள மக்கள் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மக்களின் தேவைக்கேற்ப பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று கூறினார். இதனிடையே மத்திய அரசின் நில ஆர்ஜித அவசர சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் அன்னா ஹசாரே நடத்தி வரும் போராட்டத்திலும் கெஜ்ரிவால் இன்று மாலை கலந்து கொள்கிறார். கெஜ்ரிவாலுடன், அவரது கட்சியை சேர்ந்த 67 சட்டமன்ற உறுப்பினர்களும் அன்னாவின் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி