செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு கெய்ல் – சாமுவேல்ஸ் ஜோடி 372 ரன்கள் குவித்து உலக சாதனை!…

கெய்ல் – சாமுவேல்ஸ் ஜோடி 372 ரன்கள் குவித்து உலக சாதனை!…

கெய்ல் – சாமுவேல்ஸ் ஜோடி 372 ரன்கள் குவித்து உலக சாதனை!… post thumbnail image
கிறிஸ்கெய்ல் – சாமு வேல்ஸ் ஜோடி 2–வது விக்கெட்டுக்கு 372 ரன் குவித்து உலக சாதனை படைத்தது. இதற்கு முன்பு தெண்டுல்கர் – டிராவிட் 331 ரன் (நியூசிலாந்துக்கு எதிராக, ஐதராபாத் 1999) குவித்ததே ஒரு ஜோடி எடுத்த அதிக ரன்னாக இருந்தது. அதை இன்று கெய்ல் – சாமுவேல்ஸ் முறியடித்து உலக சாதனை படைத்தனர்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா, தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் தலா 16 சிக்சர் அடித்து அதிக சிக்சர் அடித்தவர்களில் முதலிடத்தில் உள்ளனர். இன்றைய போட்டியில் கிறிஸ்கெய்ல் 16 சிக்சர் அடித்து அவரது சாதனையை சமன் செய்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி