சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் பேஸ்புக் பக்கத்தில் மூன்று சிறுவர்களுடன் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்று வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் இருந்த மூன்று குழந்தைகளும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களை காப்பாற்ற முடியாது என டாக்டர்கள் கைவிரித்துவிட்ட நிலையில், அவர்களின் கடைசி ஆசையாக விஜய் அண்ணாவை பார்த்து ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அது விஜய்யின் ரசிகர் மன்றம் மூலமாக விஜய்க்கு போக உடனே அந்த குழுந்தைகளை அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அவர்களுடன் உணவும் சாப்பிட்டார் விஜய்.
இதை அறிந்த அஜித் ரசிகர்களில் ஒருவர் அவரது சமூக வலைத்தளத்தில் கருணையோ, சுய விளம்பரமோ அந்த பசங்க நிச்சயமாக சந்தோஷப்பட்டீருப்பாங்க #HatsofVijay இப்படிக்கு தல ரசிகன் என்ற பதிவை போட்டிருந்தார்.
விஜய், அஜித் ரசிகர்கள் அடித்துக் கொண்டாலும் இது போல் சில நல்ல காரியங்களை செய்யும் போது பாராட்ட மறப்பதில்லை. இதே போல் ஒற்றுமையாக இருந்தால் விஜய், அஜித் இருவரும் கட்டாயம் சந்தோஷப்படுவார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி