முதலில் ஆம்ஆத்மியை சேர்ந்த 67 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். அவர்களை தொடர்ந்து பாரதீய ஜனதாவின் மூன்று எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். தற்காலிக சபாநாயகர் அவர்களுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்றே பதவி ஏற்று முடிக்கிறார்கள். நாளை நடக்கும் இரண்டாவது நாள் கூட்டத்தில் டெல்லி மாநில கவர்னர் நஜீப் ஜங் உரையாற்றுவார். அவரது உரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கெஜ்ரிவால் அரசின் புதிய திட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகளை அறிவிக்கும் வகையில் நாளைய கவர்னர் உரை இருக்கும் என்று தெரிகிறது.
இதுதவிர மின் கட்டண குறைப்பு, குடிநீர் பிரச்சினை போன்றவற்றுக்கும் கவர்னர் உரையில் தீர்வு ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. கவர்னர் உரையை தொடர்ந்து புதிய சபாநாயகர் தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது. ஆம்ஆத்மி மூத்த தலைவர் ஒருவர் சபாநாயகர் ஆவார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே டெல்லி சட்டசபையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மொத்த உறுப்பினர்கள் 70 பேர் தான் என்ற போதிலும் 108 பேர் அமரும் வகையில் இருக்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி