இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆயிரக் கணக்கில் கலந்து கொண்டனர். ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த போராட்டம் நாளை வரை நடைபெற உள்ளது. ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். இதை வரவேற்றுள்ள அன்னாஹசாரே இது பற்றி கூறுகையில், ராகுலும், கெஜ்ரிவாலும் வரட்டும். ஆனால் அவர்கள் மேடை ஏற அனுமதிக்க மாட்டோம். தொண்டர்களோடு தொண்டர்களாக அமரலாம் என்றார்.
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் 2 முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று அன்னாஹசாரே வற்புறுத்தி வருகிறார். டெல்லி போராட்டத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் அடுத்தக் கட்டமாக நாடு முழுவதும் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக அன்னாஹசாரே கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி