இந்த ஆறு பேரில் முதல் மூன்று இடங்களை ஹரிப்ரியா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி ஆகியோர் பிடித்தனர். இதனால் போட்டியில் இருந்து வெளியேறிய பரத், ஸ்ரீஷா, அனுஷ்யா ஆகியோருக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. பின்னர் மூன்றாவது இடத்தை ஹரிப்ரியா பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை கனடாவை சேர்ந்த இலங்கை தமிழரான ஜெசிக்கா பிடித்தார். அவருக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. அதை ஜெசிக்கா பெற்றுக் கொண்டதும் மேடையில் பேசிய அவரது தந்தை, பரிசு தொகை முழுவதையும் அனாதை குழந்தைகளுக்கு தருவதாக கூறினார். இதையடுத்து முதல் இடத்தை பிடித்த ஸ்பூர்த்திக்கு 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக பின்னணி பாடகர்கள் சங்கர் மகாதேவன், மனோ, சித்ரா, சுபா, ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் கே.வி.ஆனந்த ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இக்கல்லூரியின் நிறுவனரான முன்னாள் எம்.பி. தங்கபாலும் கலந்து கொண்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி