இதுகுறித்து அவர் சீனர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், அனைவருக்கும் சீன புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புதிய ஆண்டில் உங்களுக்கு மகிழ்ச்சியும், வளமும் அமைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். மங்கோலியர்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச்செய்தியில், மங்கோலிய நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.
புத்தாண்டில் சந்தோஷமும், நல்ல உடல்நலனும் அமைய வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதேபோல கொரியா, வியட்னாம் நாட்டு மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். வெளிநாடுகளில் கொண்டாடப்படும் விழாக்களுக்கு அந்த நாடுகளின் உள்ளூர் மொழியிலேயே மோடி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். நேற்றும் உள்ளூர் மொழியிலேயே அவர் வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி