இந்த 3 வேடங்களுமே ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதாம். மன்னர் யுகம், டெக்னாலஜி யுகம் என இரண்டு காலகட்டங்களில் நடக்கும் ‘புலி’ படத்தில் ஒரு விஜய் குள்ள மனிதராகவும், இன்னொரு விஜய் ஓவியராகவும், மூன்றாவது விஜய் மாடர்ன் யூத்தாகவும் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் என இரண்டு நாயகிகள் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்கள். ஆனால் மூன்றாவது விஜய்க்கு ஜோடி இருப்பதாகத் தெரியவில்லை.
சமீபத்தில் ஈசிஆரில் படமாக்கப்பட்ட பாடல் காட்சி ஒன்றில் காமெடி நடிகை வித்யூலேகா ராமன் விஜய்யுடன் ஆடி அசத்தினார். தற்போது கேரளாவில் உள்ள மியூசியம் ஒன்றில் டெக்னாலஜி யுகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். விஜய்யும், ஸ்ருதிஹாசனும் இதில் கலந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வரும் ஜூலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி