செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ஆஸ்திரேலியாவில் இரட்டை புயல் தாக்கியது!…

ஆஸ்திரேலியாவில் இரட்டை புயல் தாக்கியது!…

ஆஸ்திரேலியாவில் இரட்டை புயல் தாக்கியது!… post thumbnail image
பிரிஸ்பேன்:-ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் நேற்று லாம் மற்றும் மார்சியா ஆகிய இரட்டை புயல் தாக்கியது. அதில் குவின்ஸ்லாந்து மாகாணத்தின் மத்திய கடற்கரை பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. மார்சியா புயல் மணிக்கு 285 கி.மீட்டர் வேகத்தில் வீசியது. இதனால் பேய்க்காற்று குவின்ஸ்லாந்து மக்களை புரட்டி போட்டது.

மார்சியா புயல் செயின்ட் லாரன்ஸ் நகருக்கும் யெப்பூனுக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எல்சோ தீவில் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.பல வீடுகள் மற்றும் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இச்சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. லாம் புயல் வடக்கு பகுதியில் கடுமையாக தாக்கியது. இதனால் அங்கு மின்சாரம் தடைபட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். மக்கே, புரோசர்பின், யெப்பூன், பிரிஸ்பேன் உள்ளிட்ட பல நகரங்களில் தாழ்வான பகுதியில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். யெப்பூனில் மட்டும் 870 வீடுகளில் இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

அவர்கள் 134 பள்ளிகள் மற்றும் 43 குழந்தைகள் நல மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா தீவான ஹெரோன் தீவில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
புயல் தாக்கிய பகுதிகளில் அவசர கால நடவடிக்கைகள் மேற்கொள்ள பிரதமர் டோனி அபோட் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்பு கடந்த 2013–ம் ஆண்டில் ஆஸ்வால்ட் என்ற புயல் குவின்ஸ்லாந்தை தாக்கியது. அதில் 4 பேர் பலியாகினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி