இச்சம்பவம் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இனவெறி தாக்குதல் என தெரிவித்தனர். இந்தியாவும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தது. அதை தொடர்ந்து மாடிசன் நகர போலீசார் தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரி ஒருவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடப்பட்டார். இந்த நிலையில் சுரேஷ்பாய் படேல் தாக்கப்பட்டதற்கு இந்தியாவிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்டுள்ளது.
அலபாமா மாகாண கவர்னர் அட்லாண்டாவில் உள்ள இந்திய தூதருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இந்தியர் சுரேஷ்பாய் படேல் தாக்கப்பட்டதற்கு வருத்தமும், மன்னிப்பும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். நீதி நிலைநாட்டப்படும் என இந்திய அரசுக்கு உறுதி அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி