இந்நிலையில் மனைவியின் கொலை வழக்கு விசாரணையின்போது, சரியாக ஒத்துழைக்காததால் சசிதரூரை போலீசார் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாயின. இதனிடையே போலீஸ் அனுமதியுடன் 5 நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சசிதரூர் திருவனந்தபுரம் வந்துள்ளார்.
தன்னை போலீசார் எச்சரித்ததாக வெளியான தகவல் குறித்து சசிதரூர் நிருபர்களிடம் கூறுகையில், இதுபோன்ற எச்சரிக்கை ஏதாவது போலீசாரால் விடுக்கப்பட்டால் அதை முதலில் என்னிடம்தான் போலீசார் கூறுவார்கள். எனவே என்னை போலீசார் எச்சரித்ததாக கூறவது அடிப்படை ஆதாரமற்றது. நான் போலீசாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்து வருகிறேன் என்று விளக்கம் அளித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி