இங்கு 6.9 ரிக்டர் ஆக நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இவாட் மாகாணத்தில் கடலுக்கு அடியில் 10 கி.மீட்டர் (6 மைல்) ஆழத்தில் அது உருவாகியுள்ளது. இதனால் கடலில் வழக்கத்துக்கு மாறாக அலைகள் உயரமாக எழும்பின. நிலநடுக்கம் ஏற்பட்ட 45 நிமிடங்களுக்கு பிறகு 10 செ.மீட்டர் (3.94 இஞ்ச்) அளவுக்கு அலைகள் உருவாகின. அவை மேலும் 1 மீட்டர் 83 அடி உயரத்துக்கு எழும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஜப்பான் வானிலை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து கடலோரத்தில் தங்கியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். உடனே அங்குள்ள மக்கள் குழந்தைகளுடன் பாதுகாப்பான இடங்களை தேடி கூட்டம் கூட்டமாக புறப்பட்டு சென்றனர். இந்த நிலநடுக்கம் 690 கி.மீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் டோக்கியோவிலும் உணரப்பட்டது. எனவே நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் சேத மதிப்பு அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சேத விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி