இந்த ஆய்வின் வெற்றியை கொண்டாடும் விதமாக பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து, சந்தோஷமாக பொழுதை கழிக்கிறார்கள். அதன்பின் மந்தாராக்கோட்டை என்னும் மலை கிராமத்திற்கு மெடிக்கல் கேம்ப் செல்கிறார்கள். இந்த மெடிக்கல் கேம்பிற்கு ஈடுபாடு இல்லாமல் செல்லும் ரஞ்சித், நண்பர்களுடன் சேர்ந்த அதை ஜாலியான பிக்னிக்காக மாற்றுகிறார். ஒரு நாள் காட்டுப் பகுதிக்குள் சென்று மது அருந்தி கொண்டிருக்கும்போது, ரஞ்சித்தின் நண்பர்களில் ஒருவர் மர்மமான முறையில் இறக்கிறார். மேலும் ஒருவருக்கு காயம் ஏற்படுகிறது.
இதன்பின் மருத்துவ முகாமை முடித்துவிட்டு, மீண்டும் கல்லூரிக்கு திரும்பும் ரஞ்சித், அங்குள்ள மருத்துவமனையில் ஊழியர்களும், நோயாளிகளும் மர்மமான முறையில் இறப்பதை கண்டு பயப்படுகிறார்கள். ரஞ்சித்தின் அப்பாவும், இந்த மருத்துவமனையில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்று அறிகிறார். இதனால் மந்திரவாதியாக இருக்கும் பொன்னம்பலத்தை அழைத்து பூஜை நடத்துகிறார். பூஜை நடத்திய பொன்னம்பலம் இங்கு ஒரு ஆவி இருப்பதாக கூறுகிறார். இதை கேட்ட அனைவரும் அதிர்ந்து போகிறார்கள்.
இந்த ஆவி இங்குள்ள மனிதர்களை கொலை செய்வதற்கு காரணம் என்ன..? அந்த ஆவியை விரட்டினார்களா..? இல்லையா..? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரஞ்சித்குமார் புதுமுகம் என்பதால் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இவருடன் நடித்த நண்பர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். படத்தில் தரீனா, பிரியா என்று இரண்டு நாயகிகள் நடித்திருக்கிறார்கள். இருவரும் யதார்த்தத்தை மீறாமல் நடித்திருக்கிறார்கள்.
தற்போதுள்ள சூழ்நிலையில் பேய், ஆவி, திகில் நிறைந்த படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வரிசையில் இப்படத்தையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று எண்ணி இயக்கிருக்கிறார் இயக்குனர் ஆர்.ஷம்பத். சில இடங்களில் ரசிகர்களை பயமுறுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். ஆர்.ஷம்பத் இசையில் பாடல்கள் சுமார் ரகம். மகிபாலனின் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ரஞ்சித்தின் திரைக்கதையில் தெளிவில்லாமல் இருக்கிறது.
ஆக மொத்தத்தில் ‘மண்டோதரி’ பயமில்லை…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி