புதுடெல்லி :- டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி ஆம் ஆத்மி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மாநிலம் முழுவதும் இணையதள உபயோகத்துக்காக இலவச ‘வை-பை’ வசதி ஏற்படுத்தப்படும் என கூறப்பட்டு இருந்தது. தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதற்கான பேச்சுவார்த்தையை கட்சி தற்போதே தொடங்கி விட்டது. அதன்படி, ‘பேஸ்புக்’ நிறுவனம் உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்களுடன் ஆம் ஆத்மி தன்னார்வ தொண்டர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஐ.டி. நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக பணி செய்து வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘இந்த வசதி 30 நிமிட விளம்பரத்துடன் செயல்படுத்தப்படும். இந்த விளம்பரம் மூலம் அரசுக்கு சுமார் ரூ.100 கோடி வருமானமும் கிடைக்கும். இந்த விளம்பர திட்டத்தை கெஜ்ரிவால் அங்கீகரிப்பாரா? என தெரியவில்லை. எனினும் அவரிடம் இது குறித்து விளக்கப்படும்’ என்றனர்.
இந்த இலவச திட்டப்படி, டெல்லியில் ‘வை-பை’ மூலம் இணையதளம் உபயோகிப்பவர்கள், முதல் 30 நிமிடங்களுக்கு பணம் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி