தெலுங்கில் பிரபல நடிகர்கள் படங்களை பூரிஜெகன்னாத் இயக்கியுள்ளார். விரைவில் சார்மியை கதாநாயகியாக வைத்தும் படம் இயக்க உள்ளார். இந்த நிலையில்தான் காதல் கிசுகிசு பரவி உள்ளது. இருவரும் தனிமையில் சந்திப்பதாகவும் ஓட்டல்களில் ஜோடியாக உட்கார்ந்து சாப்பிடுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பூரிஜெகன்னாத்திடம் கேட்டபோது, மறுத்தார். எனக்கு சார்மியை நன்றாக தெரியும். என்னுடைய அடுத்த படத்தில் அவர் நடிக்கிறார். எங்களுக்குள் காதல் என்று செய்தி வெளியாகி இருப்பது ஆச்சரியப்படுத்தி உள்ளது சார்மியும் நானும் நண்பர்களாகத்தான் பழகுகிறோம். கதை பற்றி மட்டுமே விவாதிக்கிறோம். வேறு எதுவும் எங்களுக்குள் இல்லை என்றார். அவர் மறுப்பு சொன்னாலும் காதலிப்பது நிஜம்தான் என்று தெலுங்கு பட உலகினர் கிசுகிசுக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி