அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அத்வானியின் சென்னை வருகை ரத்து!…

அத்வானியின் சென்னை வருகை ரத்து!…

அத்வானியின் சென்னை வருகை ரத்து!… post thumbnail image
மாமல்லபுரம்:-பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி 2 நாள் பயணமாக சென்னை வர இருந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாமல்லபுரம் வந்து அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குவதாக இருந்தது. இன்று எல்.கே.அத்வானி கல்பாக்கம் அணுமின் நிலையம் சென்று அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அத்வானியின் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரது நிகழ்ச்சி எதற்காக ரத்து செய்யப்பட்டது என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் அத்வானியின் வருகைக்காக போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. அதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட முகாமிட்டிருந்த சுமார் 200 போலீசார் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி