‘டங்காமாரி ஊதாரி’ பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘அனேகன்’ படத்தின் கதை கொஞ்சம் கசிய ஆரம்பித்திருக்கிறது. தனுஷூம், அமைரா தஸ்தூரும் காதலிக்கின்றனர். இந்தக் காதல் ஒரு தலைமுறையோடு முடிந்துபோய்விடவில்லை. நான்கு தலைமுறையாகத் தொடர்கிறது. நான்கு தலைமுறையிலும் தனுஷூம், அமைரா தஸ்தூரும் காதலிக்கின்றனர். அந்த அளவுக்கு தீராக் காதலை கே.வி. ஆனந்த் ‘அனேகன்’ மூலம் சொல்லியிருக்கிறாராம். இதில் தனுஷ், அமைரா தஸ்தூர் இருவருக்குமே நான்கு கெட்டப்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ஷமிதாப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் இவரின் அனேகன் படம் வரவிருக்கிறது. இப்படம் தான் தனுஷ் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். மேலும், அதிக திரையரங்குகளில் ரிலிஸாகும் இந்த படம் தனுஷின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமையும் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி