இதனிடையே அமெரிக்க அரசு சீன அதிபர் ஜி ஜின்பிங்யுடன், ஜப்பான் அதிபர் ஷின்சோ அபேவையும் அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் கடந்த வெள்ளிக்கிழமையன்று கூறியிருந்தார். காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு மிகப்பெரிய பிரச்சனைகளில் அமெரிக்கா மற்றும் சீன நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
கடந்த நவம்பர் மாதம் பெய்ஜிங்கில் நடந்த ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டத்தில் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு பசுமை இல்ல மாசு வாயுக்கள் வெளியாவதை கட்டுப்படுத்த வேண்டும் என இரு நாட்டு தலைவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பின், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி