செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் எச்.எஸ்.பி.சி. வங்கியில் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கிய புள்ளிகள்!…

எச்.எஸ்.பி.சி. வங்கியில் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கிய புள்ளிகள்!…

எச்.எஸ்.பி.சி. வங்கியில் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கிய புள்ளிகள்!… post thumbnail image
புதுடெல்லி:-எச்.எஸ்.பி.சி. வங்கியின் வெளிநாட்டு கிளைகளில் இந்தியர்கள் பலரின் கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ள விவரங்கள் தற்போது அம்பலமாகியுள்ளது. ஸ்விஸ் லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ள அந்த தகவலில் 2006-2007 ஆண்டு வரையிலான கால கட்டத்தில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் வாஷிங்டனை சேர்ந்த சர்வதேச துப்பறியும் ஊடகவியலாளர் கூட்டமைப்பும் இணைந்து இந்த ரகசிய ஆய்வை மேற்கொண்டன.

இதில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ஆனந்த் சந்த் பர்மன், ராஜன் நந்தா, யசோவர்தன் பிர்லா, சந்துரு லக்ஷ்மண்தாஸ் ரஹேஜா, தத்தாராஜ் சல்கோகர் மற்றும் ஷ்ராவன் குப்தா உள்ளிட்ட பல தொழிலதிபர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஏறத்தாழ 1195 பேரின் கருப்பு பண வங்கி கணக்குகள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியே கசிந்துள்ளன. அதில் 100 பேர் பேரின் பெயர்களும், பதுக்கிய தொகை பற்றிய விவரங்களும் தெரியவந்துள்ளது.

அதன்படி இப்பட்டியலில் முக்கிய தொழிலதிபர்களான உத்தம் சந்தானி கோபால்தாஸ் வதுமால் அல்லது அவரது குடும்பத்தினர் அதிகபட்சமாக 338 கோடி ரூபாய் பதுக்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேத்தா ரிஹன் ஹர்ஷத் என்பவர் 333 கோடி ரூபாயும், தரணி மகேஷ் திகம்தாஸ் என்பவர் 252 கோடியும் பதுக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. ரிலையன்ஸ் குழும அதிபர்களான முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோர் தலா 165 கோடி ரூபாயும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனரான நரேஷ் கோயல் 116 கோடி ரூபாயும் பதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி