கடனில் மூழ்கியுள்ள கினி, லைபீரியா, சியராலியோன் நாடுகளுக்கு உதவ ஐ.எம்.எப்.-ன் புதிய கடன் நிவாரண அறக்கட்டளை கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இதன் மூலமாக அந்நாடுகளின் கடன் சுமையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து இங்கிலாந்து நிதி அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எபோலா வைரஸ் மனித வாழ்க்கையை மட்டுமின்றி, கினியா, லைபீரியா மற்றும் சியரா லியோனின் பொருளாதாரத்தையும் மிக மோசமாக தாக்கியுள்ளது. இந்நிலையில் அதற்காக 50 மில்லியன் டாலர் கொடுப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்பணத்தை கொண்டு, தங்கள் கடன்களுக்காக குறைவான பணத்தையும், மக்களின் உயிரை காப்பாற்றும் சுகாதார பணிகளுக்காக அதிகளவு பணத்தையும் இந்நாடுகள் செலவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி