செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்பு!…

‘என்னை அறிந்தால்’ படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்பு!…

‘என்னை அறிந்தால்’ படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்பு!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள ‘என்னை அறிந்தால்’ படம் முதல் நாள் முதலே வசூலிலும், பாக்ஸ் ஆபீசிலும் ஹிட் அடித்துள்ளது. முதல்நாள் வசூலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

‘என்னை அறிந்தால்’ படம் குறித்து ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பாசிட்டிவான விமர்சனங்கள் எழுந்தாலும், படத்தின் நீளம் குறித்த நெகட்டிவான விமர்சனங்களும் எல்லோர் மத்தியிலும் கேள்வியாக எழுந்துள்ளது. படத்தின் முன்பாதி சற்று நீளமாக இருப்பதால், அதனை கொஞ்சம் குறைத்தால் விறுவிறுப்பாக ரசிக்கும்படியாக இருக்கும் என அனைவரும் கூறியுள்ளதால் படத்தின் நீளத்தை குறைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து, இன்று முதல் படத்தின் முதல் பாதியில் 6 நிமிடங்கள் வரை காட்சிகளை குறைத்துள்ளார்களாம். இதனால், முன்பைவிட படம் கொஞ்சம் கூடுதல் விறுவிறுப்பாக இருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். 2 மணி 48 மணி நேரம் ஓடிய படம் தற்போது 2 மணி 42 மணி நேரம் வரை ஓடக்கூடியதாக அமைந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி