புதுடெல்லி:-வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பேசும்போது, மத சகிப்பின்மையால் இந்தியாவில் நடந்த காரியங்களை காந்தி கண்டிருந்தால் அதிர்ச்சி அடைந்திருப்பார் என கூறினார். இதற்கு பதில் அளிக்கிற வகையில் டெல்லியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிருபர்களிடம் பேசுகையில், மத சகிப்புத்தன்மை என்பது நமது கலாசாரத்தின் அங்கம் ஆகும். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் என அனைத்து மத நம்பிக்கை உள்ளவர்களும் இங்கு இணைந்து வாழ்கிறார்கள். நமது நாட்டில் சாதி, இனம், மதத்தின் பெயரால் பேதங்கள் பார்ப்பதில்லை என்று கூறினார்.
ஒபாமாவின் பேச்சுக்கு விசுவ இந்து பரிஷத்தும் பதில் அளித்துள்ளது. அந்த அமைப்பின் மூத்த தலைவர் சுரேந்திர ஜெயின், மத சகிப்புத்தன்மை பற்றி இந்தியாவுக்கு ஒபாமா போதனை செய்ய தேவையில்லை. அதற்கு பதிலாக அவர், கருப்பின மக்களுக்கு எதிராக நடத்தப்படுகிற வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தட்டும் என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி