கொச்சி:-ஹருன் குளோபல் ரிச் 2015 பட்டியல் அண்மையில் வெளியானது. அதில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக பணக்காரர்களை கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கு அடுத்ததாக சீனா உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த முறை ரஷ்யா, இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியா தற்போது உள்நாட்டில் மொத்தம் 97 பணக்காரர்களையும், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினராக 2,089 பணக்காரர்களையும் கொண்டுள்ளது.
உள்நாட்டில் உள்ள 97 பணக்காரர்களில் 41 பேர் பரம்பரையாகவும், 56 பேர் தனது சுய உழைப்பால் முன்வந்தவர்களாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் பணக்காரர்களின் வரிசையில், முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார். அதற்கடுத்த இடத்தில் முறையே விப்ரோ அதிபர் அசிம் பிரேம்ஜி, எச்.சி.எல் அதிபர் சிவ் நாடார், குமார் பிர்லா, சுனில் மிட்டல் ஆகியோர் டாப்-10 பட்டியலில் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி