இந்நிலையில் சாதுர்யமாக செயல்பட்ட விமானி, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களின் மீது மோதாமல் இருக்கும் வகையில் விமானம் பயணிக்கும் பாதையை திருப்பினார். இதனால் வழக்கமாக செல்லும் பாதையிலிருந்து விலகிய விமானம் பாலத்தின் மீது மோதி ஆற்றில் விழுந்தது. மிகத்தைரியமாகவும், விழிப்புடனும், அதிக உயிர் சேதங்கள் ஏற்படாத வகையில் விமானி சிறப்பாக செயல்பட்டதாக ஹாங்காங்கை சேர்ந்த விமான போக்குவரத்து ஆய்வாளரான டேனியல் ட்சாங் கூறியுள்ளார்.
தைபேயில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் விமானியின் செயலை வெகுவாக பாராட்டியுள்ளதுடன், சமூக ஊடகங்களிலும் விமானியை பாராட்டி கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
அந்நாட்டின் பிரபல நடிகையும், எழுத்தாளருமான கின் ஒய் கூறுகையில், மிக உயர்ந்த கட்டிடங்கள் மீது மோதாமல், விமானத்தை திருப்பிய விமானியை நான் ஹீரோவாக பார்க்கிறேன் என்றார். அந்த விமானி கடைசியாக கூறிய வார்த்தை மே டே! மே டே! என்ஜினில் தீப்பொறி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி