செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வாழும் மாநிலத்தில் மிசோரம் முதலிடம்!…

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வாழும் மாநிலத்தில் மிசோரம் முதலிடம்!…

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வாழும் மாநிலத்தில் மிசோரம் முதலிடம்!… post thumbnail image
ஐஸ்வால்:-புற்றுநோய்க்கு காரணமான பல்வேறு தீயப்பழக்கங்களில் இருந்து விடுபடுமாறு மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டும் வரும் நிலையில், நாட்டிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் வாழும் மாநிலமாக மிசோரம் இருந்துவரும் கடும் வேதனைக்குரிய
தகவல் வெளியாகியுள்ளது.

வயிறு, உணவுக்குழல், நுரையீரல் மற்றும் சிறுநீர் பாதை ஆகியவற்றில் புற்றுநோயின் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 5 ஆண்டு காலத்தில் 3,137 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதே காலகட்டத்தில் 5,888 பேர் இந்நோயால் அவதிப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3,137 மரணங்களில் 1,290 பேர் பெண்கள் என்றும் சிகிச்சை பெற்ற 5,888 புதிய நோயாளிகளில் 2,659 பேர் பெண்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி