சென்னை:-கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி கணவர் விஜய்யுடன் இருப்பதுபோல் அமலா பால் ஸ்டில் இணைய தளத்தில் வெளியானது. அதில் அமலாபால் தோற்றத்தை பார்த்தவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதுபற்றி அமலா பால் கூறியது: நான் கர்ப்பமாக இல்லை. கர்ப்பமானால் அதை மறைக்க மாட்டேன். குழந்தைகள் என்றால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
மலையாளத்தில் நடித்த ‘மிலி’ படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு குழந்தைகளுடனே நடந்தது. இதனால் எனது கதாபாத்திரத்தை நன்கு வெளிப்படுத்த முடிந்தது. குழந்தை மனப்பான்மையுடன் கூடிய ஒரு பெண்ணின் கதாபாத்திரம் இதில் ஏற்றிருக்கிறேன். எனது சிறுவயது தோழி ஒருவரும் இதுபோன்ற குழந்தை மனம் படைத்தவர்தான். அவரைப்பார்க்கும்போதுதான் அப்படிப்பட்டவர்களின் அப்பாவித்தனமான குணம் என்ன என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.இவ்வாறு அமலா பால் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி