செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ பட நள்ளிரவு காட்சி ரத்து செய்ததற்கு இது தான் காரணம்?…

‘என்னை அறிந்தால்’ பட நள்ளிரவு காட்சி ரத்து செய்ததற்கு இது தான் காரணம்?…

‘என்னை அறிந்தால்’ பட நள்ளிரவு காட்சி ரத்து செய்ததற்கு இது தான் காரணம்?… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை எப்படியாவது முதல் நாளே பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு டிக்கெட் புக் செய்து வருகின்றனர். இந்நிலையில் எப்போதும் பெரிய நடிகர்கள் படம் என்றால் நள்ளிரவே காட்சிகள் தொடங்கி விடும்.

இப்படத்திற்கும் அப்படி தான் தொடங்குவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு அரம்பிக்கும் என கூறப்பட்டது. இது குறித்து விசாரிக்கையில், என்னை அறிந்தால் ரிலிஸ் செய்தால் குண்டு வைப்போம் என சில மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்தனர். இதனால், மக்கள் நலன் கருதி அந்த காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி