(மார்ச் 4, 1992. சிட்னி)
உலககோப்பை 1975–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு இருந்த போதிலும் இந்தியா– பாகிஸ்தான் அணிகள் 1992–ம் ஆண்டு தான் முதல் முறையாக மோதின. அசாருதீன் தலைமையிலான அணி 43 ரன்னில் இம்ரான்கான் அணியை வீழ்த்தியது. முதலில் ஆடிய இந்தியா 49 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்தது. தெண்டுல்கர் அதிகபட்சமாக 54 ரன்னும், அஜய் ஜடேஜா 46 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் 48.1 ஓவரில் 173 ரன்னில் சுருண்டது. அமீர் சொகைல் அதிகபட்சமாக 62 ரன் எடுத்தார். கபில்தேவ், மனோஜ் பிரபாகர், ஸ்ரீநாத் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். தெண்டுல்கர் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார். இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியான்டட் இந்திய விக்கெட் கீப்பர் கிரண்மோரேயை கிண்டல் செய்து 3 முறை துள்ளிகுதித்த சம்பவம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் தான் அந்த உலககோப்பையை கைப்பற்றியது.
(மார்ச் 9, 1996. பெங்களூர்)
பெங்களூரில் நடந்த கால்இறுதியில் 39 ரன்னில் வீழ்த்தியது. இந்திய அணி 287 ரன் குவித்தது. சித்து 93 ரன் எடுத்தார். வாக்கர் யூனுஸ் பந்தை விளாசி அஜய் ஜடேஜா 45 ரன் (25 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்னே எடுக்க முடிந்தது. அமீர் சோகைல் அதிகபட்சமாக 55 ரன் எடுத்தார். வெங்கடேஷ் பிரசாத், கும்ப்ளே தலா 3 விக்கெட் கைப்பற்றினர். சித்து ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். இந்த ஆட்டத்திலும், அமீர் சோனகல்– வெங்கடேஷ் பிரசாத் இடையே வாக்குவாத சர்ச்சை ஏற்பட்டது.
(ஜூன் 8, 1999. மாஸ்செஸ்டர்)
இங்கிலாந்தில் நடந்த உலககோப்பையில் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின. முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன் எடுத்தது. டிராவிட் 61 ரன்னும், கேப்டன் அசாருதீன் 59 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் 45.3 ஒவரில் 180 ரன்னில் சுருண்டது. இதனால் 47 ரன்னில் 3–வது முறையாக இந்திய அணி வென்றது. இன்ஜமாம் அதிகபட்சமாக 41 ரன் எடுத்தார். வெங்கடேஷ் பிரசாத் 5 விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார். ஸ்ரீநாத்துக்கு 3 விக்கெட் கிடைத்தது.
(மார்ச் 1, 2003. செஞ்சூரியன்)
இதற்கு முன்பு 3 தடவை முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்ற இந்தியா 2003 உலககோப்பையில் முதல் முறையாக 2–வது பேட்டிங் செய்து பாகிஸ்தானை வீழ்த்தியது. இதற்கு தெண்டுல்கரின் அதிரடி ஆட்டமே காரணம்.
சயீத் அன்வரின் சதத்தால் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன் குவித்தது. 26 பந்து எஞ்சி இருந்த நிலையில் இந்தியா 4 விக்கெட்டை இழந்து இந்த இலக்கை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தெண்டுல்கர் 75 பந்தில் 12 பவுண்டரி, 1 சிக்சருடன் 98 ரன் எடுத்தார். அவரே ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார். யுவராஜ்சிங் 50 ரன்னும், டிராவிட் 44 ரன்னும் (அவுட்இல்லை) எடுத்தனர்.
(மார்ச்.30, 2011. மொகாலி)
கடந்த உலககோப்பையில் இரு அணிகளும் அரை இறுதியில் மோதின. முதலில் ஆடிய டோனி தலைமையிலான இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்தது. தெண்டுல்கர் 85 ரன்னும், ரெய்னா 36 ரன்னும் எடுத்தனர். வகாப் ரியாஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் 49.5 ஓவரில் 231 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் 29 ரன்னில் வென்று இந்தியா 5–வது முறையாக உலககோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தியது. மிஸ்பா–உல்–ஹக் அதிகபட்சமாக 56 ரன் எடுத்தார். ஜாகீர்கான், நெக்ரா, முனாப் பட்டேல், ஹர்பஜன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். தெண்டுல்கர் 3–வது முறையாக ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி