செய்திகள்,திரையுலகம் ஏழாவது மகன் (2015) திரை விமர்சனம்…

ஏழாவது மகன் (2015) திரை விமர்சனம்…

ஏழாவது மகன் (2015) திரை விமர்சனம்… post thumbnail image
ஒரு மாவீரன் தீய சக்தி கொண்ட சூனியக்காரி ஒருத்தியை பூமியின் மையத்தில் சிறைப்பிடிப்பதுபோல ‘ஏழாவது மகன்’ திரைப்படம் துவங்குகிறது. சிறைப்பிடிக்கப்பட்ட சூனியக்காரி பிறகு அந்த இடத்திலிருந்து தப்பிக்கிறாள். இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு கதை நகர்கிறது. ஒரு குழந்தையை சூழ்ந்திருக்கும் தீயசக்தியிடமிருந்து காப்பாற்ற சூனியக்காரியை சிறைப்படுத்திய மாவீரன் க்ரிகோரி அழைக்கப்படுகிறான். தனது உதவியாளர் பில்லியுடன் அந்த தீய சக்தியை அழிக்க செல்லும் மாவீரன் க்ரிகோரிக்கு, அக்குழந்தையை சூழ்ந்திருப்பது தான் பல ஆண்டுகளுக்கு முன் சிறைப்பிடித்த சூனியக்காரி மதர் மல்கின் என்பது தெரிய வருகிறது.

குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் க்ரிகோரியின் உதவியாளர் பில்லி இறந்துவிடுகிறார். இந்நிலையில், சூனியக்காரி மதர் மல்கின் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் முழு நிலவிலிருந்து தன்னுடைய சக்திகளை பெறுவதாக க்ரிகோரிக்கு தெரிய வருகிறது.அந்த முழுநிலவு வர இன்னும் ஒருவார காலமே இருப்பதால் அதை எப்படியாவது தடுத்த நிறுத்த முற்படுகிறார். சூனியக்காரியிடம் சண்டையிட, தான் ஒருவனால் மட்டும் முடியாது என்பதால், இவன் தங்கியிருக்கும் கிராமத்தில் வசித்து வரும் தாமஸ் வார்ட் என்பவருக்கு சூனியக்காரியிடம் சண்டையிட பயிற்சி அளிக்கிறார். ஏழாவது மகனுடைய ஏழாவது மகன் என்று அழைக்கப்படும் தாமஸிற்கு வருங்காலத்தை அறிந்துகொள்ளும் சக்தி இருக்கிறது. ஆனால், தனக்கு ஏன் இவ்வாறு நடக்கிறது என்பது தெரியாமல் இருந்து வருகிறான். க்ரிகோரியிடம் பயிற்சிகளை கற்றுக்கொள்ளும் தாமஸ், ஆலிஸ் என்னும் பெண்ணின் மீது காதல் கொள்கிறார். ஆனால், ஆலிஸ் தாமஸ் மற்றும் க்ரிகோரியின் நடவடிக்கைகளை கண்காணிக்க மதர் மல்கினால் நியமிக்கப்பட்டவள். இறுதியில், இதையெல்லாம் தகர்த்தெறிந்து, சூனியக்காரியின் சக்திகளை அழித்து, இந்த உலகத்தை தாமஸும், க்ரிகோரியும் காப்பாற்றினார்களா? என்பதே மீதிக்கதை.

பழங்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள இபபடத்தில் ஆடை அலங்காரம், படப்பிடிப்பு தளங்கள், 3 டி எபெக்ட், மாயாஜால காட்சிகள் ஆகியவை மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காட்சி அமைப்பிற்கு ஏற்றபடி சவுண்ட் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
க்ரிகோரியாக நடித்துள்ள ஜெப் பிரிட்ஜஸ் மற்றும் தாமஸ் ஆக நடித்திருக்கும் பென் பார்ன்ஸ் ஆகியோர் அவர்களது கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளனர். பிற நடிகர்கள் அவர்களது வேலையை சரியாக செய்துள்ளனர். ஜோசெப் டெலானே என்பவற்றின் ‘தி ஸ்பூக்’ஸ் அப்ரன்டைஸ்’ என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் திரைக்கதை வலுவில்லாமல் இருப்பது பார்வையாளர்களுக்கு அதிக குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தத்தில் ‘ஏழாவது மகன்’ பிரம்மாண்டம்………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி