சென்னை:-சித்தார்த், சமந்தா இருவரும் காதல் வயப்பட்டார்கள். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். ஆனால் திடீரென அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காதலை முறித்து பிரிந்து விட்டனர். சித்தார்த்துக்கு இன்னொரு நடிகையுடன் நெருக்கம் ஏற்பட்டதால் சமந்தா விலகியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இருவரையும் மலையாளத்தில் ஹிட்டான ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோடியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. இருவரும் சேர்ந்து நடிக்க சம்மதித்து விட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் சித்தார்த் இதனை மறுத்தார். ‘பெங்களூர் டேஸ்’ ரீமேக்கில் நான் நடிக்கவில்லை என்று அறிவித்தார். சமந்தாவும் அந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதன் மூலம் இருவருக்கும் சமரசம் ஏற்படவில்லை என்றும், மீண்டும் மோதல் போக்கிலேயே உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி