இந்நிலையில் நேற்று புர்ஜ் கலீபா கட்டிடம் தீப்பிடித்து புகை வருவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதனால் புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தீ பிடித்து விட்டதாக தகவல் பரவிதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த சம்பவத்தை போலீசாரும், அந்த கட்டிடத்தை நிர்வகித்து வருபவர்களும் திட்டவட்டமாக மறுத்தனர்.
புர்ஜ் கலீபா கட்டிடத்தில் பனிமூட்டம் காரணமாக புகை போன்று ஏற்பட்டது. இதனை சிலர் படம்பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, அங்கு தீ பிடித்ததாக வதந்தியை பரப்பியுள்ளனர். எனவே இதனை யாரும் நம்பவேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டனர். மேலும் இது போன்று சமூக வலைத்தளங்களில் தவறான செய்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி