புதுடெல்லி:-ஜப்பான் நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் கென்ஜி கோட்டூ(வயது 47) மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவன காண்டிராக்டர் ஹாருணா யுக்கவா(42) ஆகிய இருவரை சிரியாவில் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்களை தலைதுண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். இதற்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் ஜப்பான் பணயக் கைதிகள் படுகொலை செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கென்ஜி கோட்டூ, ஹாருணா யுக்கவா ஆகியோர் கொல்லப்பட்டது கொடூரமானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறி உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி