செய்திகள் ஒரு சாஸ் பாட்டில் விலை 11 லட்சம் ரூபாய்!…

ஒரு சாஸ் பாட்டில் விலை 11 லட்சம் ரூபாய்!…

ஒரு சாஸ் பாட்டில் விலை 11 லட்சம் ரூபாய்!… post thumbnail image
சிட்னி:-இணைய ஏல நிறுவனமான ஈ-பே, புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள சாஸ் இணையவாசிகளின் புருவங்களை உயர்த்தியுள்ளது. காரணம் அந்த சாஸின் விலை 18000 டாலர் (11,10,959 ரூபாய்). 500 மில்லி லிட்டர் அளவுள்ள இந்த சாஸ் பாட்டிலை உலகின் மிகப்பெரிய துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் தயாரித்துள்ளது. இதை வாங்கும் அரிய வாய்ப்பு ஆஸ்திரேலியர்களுக்கு கிடைத்துள்ளது.

மொத்தம் இது போன்ற 200 சாஸ் பாட்டில்களை மட்டுமே தயாரித்துள்ளதாகவும் இந்த சாஸ் மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் கிடைக்காது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இணையத்திலும் இந்த மாதம் 9ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். கடுகு, காய்ச்சி வடிகட்டிய வினிகர், வெங்காயம், பூண்டு, உப்பு மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து இந்த சாஸ் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக வரும் பணத்தை கொண்டு சர்வதேச அளவில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவ செலவிடப்படும் என்று மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி