அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்: அன்னா ஹசாரே அறிவிப்பு!…

மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்: அன்னா ஹசாரே அறிவிப்பு!…

மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்: அன்னா ஹசாரே அறிவிப்பு!… post thumbnail image
புனே:-ஊழலுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே நேற்று தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மேலும் வாக்குறுதி அளித்தப்படி வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வரவில்லை. நிலம் கையகப்படுத்துதல் திருத்த சட்டம் -2013 தொடர்பான அவசர சட்டம் விவசாயிகள் நலனுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது.

அரசின் கொள்கை முடிவுகளில் கூட்டு பொறுப்பு இருந்தாலும், பிரதமர் மோடி தான் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்று 6 முதல் 7 மாதங்கள் அமைதியாக இருந்தேன். உடனடியாக எந்த ஒரு அதிசயத்தையும் ஏற்படுத்தி விட முடியாது என்பதற்காக அமைதி காத்தேன். ஆனால் தற்போது மோடி பதவி ஏற்று 8 மாதங்கள் ஆகி விட்டன. லோக்பால் சட்டத்தை அமல்படுத்துவது மற்றும் மாநிலங்களில் வலுவான லோக் அயுக்தா நீதிபதிகளை நியமிக்க நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு விருப்பம் காட்டுவதாக தெரியவில்லை.

இதேபோல கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வரவும் இல்லை. எனவே இந்த பிரச்சினைகளை முன்வைத்து டெல்லியில் நான் போராட்டம் தொடங்க உள்ளேன். இதில் உறுதியாக இருக்கிறேன். இதுகுறித்து எனது முக்கிய ஆதரவாளர்களை சந்தித்து பேசி போராட்ட தேதியை இறுதி செய்வேன். இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி