செய்திகள்,திரையுலகம் தரணி (2015) திரை விமர்சனம்…

தரணி (2015) திரை விமர்சனம்…

தரணி (2015) திரை விமர்சனம்… post thumbnail image
குமரவேல், ஆரி, கர்ணா ஆகிய மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் சென்னையில் வேலை ஏதும் இல்லாமல் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள். இதில் குமரவேல், சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். ஆனால் நடிப்பதற்கு சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். பட்டதாரியான கர்ணா, படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் சோகத்தில் இருந்து வருகிறார். மற்றொரு நண்பரான ஆரி, தன் அப்பா நடத்தி வரும் ஓட்டலை பார்த்து வருகிறார். இந்த ஓட்டல் அதிக கடனில் இருப்பதால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார் ஆரி.

இவர்களின் வாழ்க்கை சோகத்திலும், கஷ்டத்திலும் செல்வதால் மிகவும் வருத்தமடைகின்றனர். இவர்களின் கஷ்டம் இறுதி கட்டத்திற்கு செல்கிறது. இதனால், மூன்று பேரும் பிரிந்து விடலாம் என்று முடிவு செய்து பிரிகிறார்கள். இதில் குமரவேல் ஊருக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு நண்பர்களை விட்டு பிரிகிறார். ஆரியும், கர்ணாவும் அவரவர் வீட்டிற்கு செல்கிறார்கள். இப்படி தோல்வியை சந்தித்து வந்த மூன்று பேரும், வாழ்க்கையில் வெற்றி பெற்றார்களா? மூன்று பேரும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? இவர்களின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே மீதிக்கதை. குமரவேல், ஆரி, கர்ணா ஆகியோர் சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ‘நெடுஞ்சாலை’ படத்தில் சிறப்பாக நடித்த ஆரிதானா! இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நாயகியான சாண்ட்ராவிற்கு படத்தில் வேலையே இல்லை. குறைவான காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார்.

மூன்று கதாபாத்திரங்களை வைத்து அதற்கு மூன்று வித்தியாசமான திரைக்கதைகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் குகன் சம்பந்தம். மூன்று கதைகளுமே வெவ்வேறு கோணத்தில் செல்கிறது. ஏதாவது ஒன்றாவது சுவாரஸ்யத்தோடு சொல்லியிருக்கலாம். வலுவில்லாமலேயே திரைக்கதை நகர்கிறது. பழைய படங்களின் சாயல் ஆங்காங்கே தெரிகிறது.
வினோத் காந்தியின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு தெளிவில்லாமல் இருக்கிறது. பாக்யநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘தரணி’ வாழ்க்கை…………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி