செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ஐதராபாத்தில் 12 டாக்டர்களுக்கு பன்றி காய்ச்சல்!…

ஐதராபாத்தில் 12 டாக்டர்களுக்கு பன்றி காய்ச்சல்!…

ஐதராபாத்தில் 12 டாக்டர்களுக்கு பன்றி காய்ச்சல்!… post thumbnail image
ஐதராபாத்:-ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. தெலுங்கானாவில் பன்றி காய்ச்சலுக்கு 583 பேர் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனை, காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பன்றி காய்ச்சலுக்கு ஏற்கனவே 32 பேர் பலியாகி இருந்தனர். நேற்று காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 58 மற்றும் 80 வயது பெண்கள் 2 பேர் பலியாகினார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது.இந்நிலையில் உஸ்மானியா மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் நோய் பிரிவு வார்டில் பணியாற்றி வந்த 12 ஜூனியர் டாக்டர்களுக்கு பன்றி காய்ச்சல் நோய் தொற்றியது. அவர்களுக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் இது கண்டறியப்பட்டது.

அவர்களுக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டது. அவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த தெலுங்கானா அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதாரத்தை மந்திரி லட்சுமி ரெட்டி உஸ்மானிய மருத்துவமனையில் நேற்று நேரடியாக ஆய்வு செய்தார். பன்றிகாய்ச்சல் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைபற்றி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி