லண்டன்:-விண்வெளியில் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டு பிடிக்க அமெரிக்காவின் நாசா மையம் கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் உள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் புதிய சூரிய மண்டலம் கண்டு பிடித்தது. அது குறித்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதையடுத்து, அந்த மண்டலத்தில் சூரியன் போன்று புதிய நட்சத்திரம் உள்ளது. அதற்கு கெப்லர் 444 என பெயரிட்டுள்ளனர்.
அதைச்சுற்றி பூமியை போன்று 5 புதிய கிரகங்கள் உள்ளன. அவை புதன் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு இடையே அமைந்துள்ளன. புதிய சூரிய மண்டலம் 112 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. அது விண்வெளியில் இருக்கும் மிகப் பழமை வாய்ந்த கிரகங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி