மும்பை:-சமீபகாலமாக அபிஷேக் பச்சன் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கும், மாமியார் ஜெயா பச்சனுக்கும் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்படுவதாக செய்திகள் வெளியாகின. தற்போது அபிஷேக் பச்சன் இவர்களின் பிரச்சனையை தீர்க்க தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்துள்ளாராம். அமிதாப் பச்சனும் இதற்கு சம்மதம் தெரிவிட்து விட்டதால், தற்போது 41 கோடி ரூபாய் கொடுத்து ஒரு சொகுசு பங்களாவை வாங்கியுள்ளார்.
மும்பை வொர்லி பகுதியில் கட்டப்பட்டு வரும் ஸ்கைலாக் டவர் என்ற சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 41 கோடியே 14 லட்சத்துக்கு வீடு வாங்குவதற்காக முன்பணம் செலுத்தி பதிவு செய்துள்ளாராம். அபிஷேக் பச்சன் வாங்கி இருப்பது 5 படுக்கை அறைகளை கொண்ட சொகுசு வீடு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி