புதுடெல்லி:-இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு இந்தியாவுடனான உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா சமீபத்தில் இந்தியா வந்தார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறும் அப்போது அவர் அழைப்பு விடுத்தார். இலங்கை அரசின் இந்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி உடனே ஏற்றுக் கொண்டார். அதன்படி பிரதமர் மோடியின் இலங்கை பயணம் மார்ச் மாதம் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே இலங்கையில் புதிய அதிபராக பொறுப்பேற்ற சிறிசேனாவை, இந்தியாவுக்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட சிறிசேனா அடுத்த மாதம் 16ம் தேதி இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி