அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் யோகா செய்து உலக சாதனை படையுங்கள்: மோடி வேண்டுகோள்!…

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் யோகா செய்து உலக சாதனை படையுங்கள்: மோடி வேண்டுகோள்!…

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் யோகா செய்து உலக சாதனை படையுங்கள்: மோடி வேண்டுகோள்!… post thumbnail image
புதுடெல்லி:-குடியரசு தின விழாவில் பங்கேற்ற தேசிய மாணவர் படையினருக்கு (என்.சி.சி.) பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று தலைநகர் டெல்லியில் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கி கூறினார். அப்போது அவர் கூறியதாவது:- ஜூன் மாதம் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்து உள்ளது. இது நமக்கெல்லாம் குறிப்பாக யோகாவை புரிந்து கொண்டவர்களுக்கும், செய்து வருபவர்களுக்கும் பெருமை ஆகும்.

யோகாவுக்கு மொழியோ, வயதோ, எல்லையோ கிடையாது. இந்தியாவில் பிறந்த யோகா, இன்று உலகளாவிய பண்பாக மாறிவிட்டது. அந்தவகையில் சரியான யோகாவை உலகுக்கு அறிமுகப்படுத்துவது இந்தியாவின் மிகச்சிறந்த கடமையாகும். ஜூன் 21ம் தேதி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நீங்கள் அனைவரும் யோகா செய்ய வேண்டும். இதன் மூலம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து புதிய உலக சாதனை படைக்க வேண்டும். இதற்கான திட்டத்தை இப்போதே தொடங்கினால், யோகா குறித்த சிறந்த செய்தியை அந்த சாதனை மூலம் உலகுக்கு அளிக்க முடியும். எனவே இதற்காக இப்போதே திட்டமிடுமாறு தேசிய மாணவர் படையின் அனைத்து உறுப்பினர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இதைப்போல தூய்மை இந்தியாவிலும் நீங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். இது ஒரு திட்டமோ அல்லது நிகழ்வோ அல்ல. இது மக்களின் மனநிலையை மாற்றும் ஒரு முயற்சி ஆகும். நாட்டில் உள்ள 125 கோடி மக்களின் மனநிலையை மாற்றும் வரை இந்த பணிகள் தொடரும் நாட்டுக்கு செய்யும் ஒருவித தொண்டுதான் ‘துய்மை இந்தியா’ ஆகும்.தேசிய மாணவர் படை முகாம்கள் தான், வேற்றுமையில் ஒற்றுமைக்கான மிகச்சிறந்த உதாரணம் ஆகும். சிறிய இந்தியாவைப் போல உள்ள இந்த கூட்டம், மக்களின் எல்லையை விரிவாக்க உதவுகிறது. இங்கு அதிக எண்ணிக்கையில் பெண்களும் கலந்து கொண்டிருப்பதற்காக நான் உங்களை வாழ்த்துகிறேன். குடியரசு தினவிழாவிலும் பெண்களின் சக்தி உணரப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திலும் ராணி லட்சுமிபாய் மற்றும் ஜீஜா மாதா இருப்பதை நாடு முழுவதிலும் உள்ள மக்கள் உணர்ந்துள்ளனர். இவ்வாறு மோடி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி