செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் கேரள சினிமாவின் பிரபல காமெடி நடிகர் அரவிந்தன் மரணம்!…

கேரள சினிமாவின் பிரபல காமெடி நடிகர் அரவிந்தன் மரணம்!…

கேரள சினிமாவின் பிரபல காமெடி நடிகர் அரவிந்தன் மரணம்!… post thumbnail image
கேரளா:-கேரள சினிமாவில் பழம்பெரும் காமெடி நடிகர் அரவிந்தன். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாலா கிராமத்தை சேர்ந்த இவருக்கு வயது 72. கடந்த சில வருடங்களாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அரவிந்தன் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருந்தார். கடந்த 19ம் தேதி மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் மாலா அரவிந்தன் கோவை அவினாசி ரோட்டில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் முயற்சித்தனர். ஆனால் மாலா அரவிந்தனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.27 மணிக்கு மாலா அரவிந்தன் பரிதாபமாக இறந்தார். இதனை ஆஸ்பத்திரி டாக்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். கோவை ஆஸ்பத்திரியில் இருந்து நடிகர் மாலா அரவிந்தனின் உடல் கேரளாவுக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டது. அங்கு மாலா அரவிந்தனின் சொந்த ஊரில் அவரது இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

1967ம் ஆண்டு பத்திரப்பட்டு என்ற படத்தின் மூலம் கேரள சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சமயமில்லாம் போலும், கண்ணக்குள், அங்குரி, ஆவேசம் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து கேரள மக்களின் மனதில் இடம் பிடித்தார். கடந்த ஆண்டு மசாலா ரிப்பப்ளிக் என்ற படத்தில் நடித்தார். இது அவரது கடைசி படமாகும். அந்த படம் உள்பட 320 படங்களில் காமெடி நடிகராக நடித்து கேரள சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி வைத்திருந்தவர் மாலா அரவிந்தன்.இவருக்கு கீதா என்ற மனைவியும். முத்து என்ற மகனும், கலா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மாலா அரவிந்தனின் மரணம் கேரள சினிமா உலகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர்கள் மாலா அரவிந்தனின் குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி